செவ்வாய் தோஷம்!
இன்று திருமண வயதில் மகள் அல்லது மகன் உடைய பெற்றோர் அனவரும் தெரிந்து வைத்துள்ள ஒரு வார்த்தை "செவ்வாய் தோஷம்". செவ்வாய் தோஷம் பற்றி விவரமாக தெரிந்து கொள்வோம்.
- 12 ம் பாவத்தில் இருந்தால் 20%
- 2 ம் பாவத்தில் இருந்தால் 40%
- 4 ம் பாவத்தில் இருந்தால் 60%
- 7 ம் பாவத்தில் இருந்தால் 80%
- 8 ம் பாவத்தில் இருந்தால் 100%
இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம்:
தோஷத்தின் அளவீடு:
லக்னத்தில் இருந்து தோஷம் - பாதிப்பு 1 பங்கு
சந்த்ரனில் இருந்து தோஷம் - பாதிப்பு 1/2 பங்கு
சுக்ரனில் இருந்து தோஷம் - பாதிப்பு 1/4 பங்கு
செவ்வாய் தோஷத்தின் வகைகள்: (தோஷத்தின் அளவு இறங்கு வரிசையில்)
செவ்வாய் தோஷத்தின் வகைகள்: (தோஷத்தின் அளவு இறங்கு வரிசையில்)
- லக்னம், சந்த்ரன், சுக்ரன் - மூன்றிலிருந்தும் தோஷம் இருந்தால் 1+3/4 கடுமையான தோஷம்
- லக்னம், சந்த்ரன் - இரண்டிலிருந்தும் ஏற்படும் தோஷம் 1+1/2
- லக்னம், சுக்ரன் - இரண்டிலிருந்தும் ஏற்படும் தோஷம் 1+1/4
- லக்னத்திலிருந்து மட்டும் ஏற்படுவது 1
- சந்த்ரன், சுக்ரன் மூலமாக ஏற்படுவது 1/2+1/4
- சந்த்ரனிலிருந்து மட்டும் 1/2
- சுக்ரனிலிருந்து மட்டும் 1/4 (தோஷத்தின் அளவு மிகக் குறைவு) தோஷம் உள்ள ஜாதகத்தோடு தோஷம் உள்ள ஜாதகத்தைத்தான் இணைக்க வேண்டும்.
இனி விதி விலக்குகளை காண்போம்:
தோஷம் இல்லாத நிலைகள்:
- செவ்வாய் மேஷம், வ்ருச்சிகம், மகரம் ராசிகளில் இருப்பது
- கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகியவற்றில் செவ்வாய் இருப்பது
- புதன், குரு, சனி - இவர்களில் ஒருவர் செவ்வாயுடன் இருந்தால் அல்லது பார்த்தால்
- செவ்வாய் நின்ற ராசி நாதன் லக்னத்திலிருந்து 1, 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் இருப்பது அல்லது பார்ப்பது
- கடக லக்னத்திற்கு செவ்வாய் எங்கிருந்தாலும்
- குரு பார்வை அல்லது குருவுடன் சேர்ந்து செவ்வாய் இருப்பது
- ரிஷபம், சிம்மம் லக்னமாக இருந்து, செவ்வாய் மிதுனம், கன்னியில் இருப்பது (2 ம் இடம்)
- மிதுனம், வ்ருச்சிகம் லக்னமாக இருந்து செவ்வாய் ரிஷபம், துலாம் ராசிகளில் இருப்பது (12 ம் இடம்)
- சிம்மம், கும்பத்தில் செவ்வாய் இருக்க, அது 2, 4, 7, 8, 12 ஆக இருப்பது
thanks sir.you have given a detailed explanation.please also write about ragu/kethu in lagana or in second place
ReplyDeleteNamasthe! Thank you for your comment. Soon, I will write.
DeleteExcellent, keep going
ReplyDeleteகன்னி ராசியில் செவ்வாய் இருந்தால்
ReplyDeleteநிவர்த்தி செவ்வாய் என்று சொல்லுவார்கள்
கன்னியில் செவ்வாய் இருந்தால் தோஷ நிவர்த்தி ஆகிவிடாது. ஸிம்ம லக்னமாக இருந்து கன்னியில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை என்பதுதான் விதி.
Deleteசிறப்பான விளக்கம்.. அதேபோல... ஒரு மறைவு ஸ்தான வீடான (6,8,12) அதிபதியான செவ்வாய் (அசுப கிரகம்) வேறொரு மறைவு ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால் தோஷமில்லை, கோகி புது தில்லி மாங்கல்யம்
ReplyDeleteநன்றி, திரு கோகி. ஆனால் இது நான் கேள்விபடாத விதி. செவ்வாய் 6 ல் இருந்தால் லக்னத்தையும், 8 ல் இருந்தால் 2 ம் வீட்டையும், 12 ல் இருந்தால் 7 ம் வீட்டையும் பார்ப்பார். ஆகவே, அது தோஷ நிவர்த்தி ஆகுமா என்று சிந்திக்கவும்.
DeleteHow to pay the registration charges send me the link or send your account details
ReplyDeletePlease visit here:
ReplyDeletehttps://www.kanyadhan.com/p/schemes.html?m=1
My Son is having Chevai in 8th place along with Suriyan from Lagnam. Is he having Chevai dosham.
ReplyDeleteசூரியனுடன் செவ்வாய் சேர்ந்தால் தோஷம் இல்லை என்றும் ஒரு விதி உண்டு. ஆனால் முதலில் உங்கள் மகன் லக்னம் தெரிந்தால்தான் உறுதியாக சொல்ல முடியும். SVS Sarma 9789056745
DeleteMy son has sevvai in Leena lagnam and Chandra is in 7Th house in kanni. His marriage is still not settled. Any views sir.
ReplyDeleteThis data alone is not enough to decide whether there is dhosha or not. Contact me through contact form or over mobile.
ReplyDelete